Skip to main content

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு தள்ளுபடி

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

ரகத

 

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.


 
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருந்தது. பணம் கிடைத்து விட்டதால் சிலர் சமரசமாகப் போக விரும்புவதாகத் தெரிவித்ததை அடுத்து இந்த வழக்கினை நீதிமன்றம் முடித்து வைத்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம் என உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

 

இந்நிலையில் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் சார்பில் மேலும் மூன்று வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் மீண்டும் புதிதாக விசாரணை நடத்த சென்னை குற்றப்பிரிவு காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்