Advertisment

தடகளப் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி

Minister Senthil balaji prizes winners athletics competition Karur

Advertisment

கரூர் தாந்தோணி மலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குரு வட்டத்திற்குட்பட்ட 40 பள்ளிகளை சேர்ந்த 600 மாணவர்கள் 14,17,19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் தடகள போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெறும் வெற்றியாளர்கள் கரூர் மாவட்ட அளவிலான போட்டி, அதன் பின் மாநில அளவிலான குடியரசு தின விழா தடகளப் போட்டிகளிலும் பங்கு பெற உள்ளனர்.

இன்று நடைபெற்ற போட்டியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களைவழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்டோருடன் அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார்.

karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe