Advertisment

தமிழக மின்சாரத்துறைஅமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர்செந்தில் பாலாஜியின்அரசு இல்லத்தில்சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது வீட்டிற்கு ரேப்பிட் ஆக்சன் ஃபோர்ஸ் (RAF) வந்துள்ளனர். மேலும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டனில்உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சோதனையில் ஈடுபட அதிகாரிகள்தயாராக உள்ளனர்.