Advertisment

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

minister senthil balaji enforcement directorate issue condemn incident

அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியைகைது செய்ததை கண்டித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

சென்னை மற்றும் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னையில் நடைபெற்ற சோதனையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை கைது செய்தனர். அப்போது அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இந்நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாவட்டச் செயலாளர் அருள் தலைமையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்து சித்திரவதை செய்ததாக, பாஜக மோடி அரசு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளை கண்டித்து அமைச்சரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கண்டன கோஷம் எழுப்பினர். மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் கோவை சாலையில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உணவகத்திற்கு சீல் வைத்ததை கண்டித்தும், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும்50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

karur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe