Skip to main content

''இனி அவகாசம் நீட்டிக்கப்படாது'' - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

 

Minister Senthil Balaji confirmed that the deadline will not be extended

 

அண்மையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசின் மின்சாரத் துறை தெரிவித்திருந்த நிலையில், இதற்கான சிறப்பு முகாம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தொடர்ந்து பொதுமக்கள் ஆதார் எண்களை மின் கணக்குடன் இணைத்து வந்தனர். இந்நிலையில் ஆதாரை மின் கணக்குடன் இணைப்பதற்கு கால அவகாசத்தை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டித்து இதற்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்படாது என தமிழக மின்துறை தெரிவித்திருந்தது.

 

Minister Senthil Balaji confirmed that the deadline will not be extended

 

இந்நிலையில், கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின் இணைப்பு கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இனி நீட்டிக்கப்படாது. இன்றுடன் அதற்கான அவகாசம் நிறைவடைகிறது. மொத்தமுள்ள 2.67 கோடி பேரில் 2.66 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் மட்டுமே இன்னும் இணைக்கவில்லை'' என்றார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !