Advertisment

அமைச்சருக்கு மூன்றாண்டு சிறை; அரசு கொறடா சபாநாயகருடன் சந்திப்பு!!

பொதுச்சொத்து சேத வழக்கில் 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டதமிழக அமைச்சரவையின் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பதவி விலகியதை அடுத்து தற்போதுசபாநாயகரை அரசு கொறடா சந்தித்துள்ளார்.

Advertisment

Minister sentenced to three years jail; Government Konrada meeting with Speaker

கடந்த 1998ம் ஆண்டு பாலகிருஷ்ணா ரெட்டி பா.ஜ.க.வில் இருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் மற்றும் பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் தற்போது தமிழக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

Advertisment

தமிழக அமைச்சரவையின் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். அமைச்சரின் ராஜினாமா கடிதம் முதல்வரின் வாயிலாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாலகிருஷ்ணா ரெட்டியின் ராஜினாமாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றார்.

பாலகிருஷ்ணா ரெட்டி வகித்து வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை பொறுப்பை செங்கோட்டையன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதுஅரசு கொறடா ராஜேந்திரன் தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்தார்.

admk korada
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe