Advertisment

பள்ளிகளை மேம்படுத்தாமல் அரசு நிதி 1.627 கோடியை திருப்பி அனுப்பியது ஏன் ?

2018 -2019 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறையினை மேம்படுத்திட பல்வேறு நிதி நெருக்கடி இருந்தும் 28,757 கோடியினை அரசு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. அதில் தற்போது ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கையில் 2018-2019 ஆம் ஆண்டில் 1,627 கோடி ரூபாய் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றது.

Advertisment

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ. 894 கோடியும், இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ.437 கோடியும் ,சிறப்புக்கூறு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ.296 கோடியும் ஆகமொத்தம் ரூ 1,627 கோடியினை செலவழிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

Advertisment

i

தற்போது பள்ளிகளை மேம்படுத்த தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், முன்னாள் மாணவர்கள் என பலருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுக்க , மறுபுறம் அரசு ஒதுக்கிய நிதியினை முறையாக பயன்படுத்தாதது எதைக்காட்டுகிறது.

பெரும்பாலான பள்ளிகளில் கழிவறைகள் இல்லை, உள் கட்டமைப்பு வசதிகள் இல்லை, கணினி ஆய்வகம் மொழி ஆய்வகம் உள்ளிட்ட பாட வாரியான ஆய்வகங்கள் மற்றும் மாணவர்களின் நலன்கருதி கண்காணிப்பு கேமராக்கள் கூடுதல் வகுப்பறைகள் என ஏராளமான தேவைகள் இருக்கும் போது ரூ.1,627 கோடியினை செலவழிக்காமலேயே திருப்பி அனுப்பியதற்கான காரணம் என்ன?

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கதலைவர் இளமாறன் கூறுகையில், இதற்கு முறையான திட்டமிடல் இல்லாததே இந்த காரணமாக உள்ளது. பள்ளிகளுக்கு கழிவரை முதல் கட்டமைப்புவரை சீர் செய்யவேண்டிய நிலையில் இந்த நிதியை திருப்பி தருவதுவது மிகுந்த வேதனையாக உள்ளது. இது போன்ற காரணம் கண்டறிந்து எதிர்காலத்தில் இவ்வாறு நடந்திடாமல் தடுத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

senkottaiyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe