Minister Sengottayan speech erode

ஈரோடு மாவட்ட அ.தி.மு.கசார்பில், ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பார்க்கில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநகர் மாவட்ட அ.தி.மு.ககட்சி அலுவலகத்தில் முழு உருவ எம்.ஜி.ஆர்மற்றும் ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டது.

Advertisment

அதன் திறப்பு விழாவை, 16ஆம் தேதி காலை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். விழாவில் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ கே.எஸ்.தென்னரசு, பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம், மொடக்குறிச்சி சிவசுப்பிரமணி, அந்தியூர் ராஜா என்ற ராஜாகிருஷ்ணன், பவானிசாகர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisment

பன்னீர்செல்வம் பார்க்கில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா முழு உருவ வெண்கலச் சிலையை தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலையை, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார். கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையை தமிழக சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார்.

Minister Sengottayan speech erode

இதைத் தொடர்ந்து கட்சி அலுவலகம், கூட்ட அரங்கு, மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தினை கோவை மண்டல தகவல் தொழில்நுட்பச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் திறந்து வைத்தார். தொடர்ந்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே. சி.கருப்பணன் 80 அடி உயர கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் மாநில வர்த்தக அணிச் செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், உள்பட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில், சிறப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிநடத்தி வருகிறார். தமிழகத்தில் குடிமராமத்து போன்ற சிறப்பான திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். நிவர் புயலின்போது சிறப்பாகச் செயல்பட்டு, பல உயிர்களைக் காத்தார். சிலர் கனவு காண்கிறார்கள் அது பலிக்காது. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மீண்டும் அ.தி.மு.க.வே ஆட்சி அமைக்கும்” என்றார்.

Advertisment