Sengottaiyan

Advertisment

தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தார்.

கலெக்டர் அலுவலகத்துக்கு கட்டப்படும் கூடுதல் கட்டிடம் மற்றும் நம்பியூர் அடுத்த திட்டமலையில் ரூ.10 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடத்திற்கான பூமிபூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இந்த 2 நிகழ்ச்சியின் போதும் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தனது கல்விதுறை சம்பந்தமானவற்றையே கூறினார். பேட்டியின்போது தமற்போது அரசியல் சூழல் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு செங்கோட்டையன் பதில் கூற மறுத்துவிட்டார்.

“அரசியல் சம்பந்தமான கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க... அதற்கென்று அமைச்சர் ஜெயக்குமார் உள்ளார். அவரிடம் அரசியல் கேள்விகளை கேளுங்க...” என்று நழுவினார்.