ஜனவரி 13ம் தேதி (திங்கள்) முதல் பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை அறிவிக்கலாமா என்பதை பற்றி நாளை முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஏழை எளிய மாணவர்கள் எங்கு உள்ளார்களோ அங்கு தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய பரிசீலிக்கப்படும். அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என வதந்தி பரப்பி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.