அதிமுக தலைமை மழைவேண்டி தமிழகத்திலுள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பேரில் அமைச்சர்கள் தலைமையில் கோவிகளில் சிறப்பு யாகங்கள் நடந்து வருகிறது.

Advertisment

minister sengkottaiyan

Advertisment

ஈரோடு பச்சைமலையில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலில்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் யாகம் நடைபெற்றது.இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்.

தனியார் பள்ளிக்கூடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது எனக் கூறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கூடும். மேலும் அந்த பள்ளியின் அங்கிகாரம் ரத்து செய்யப்படும். உள்கட்டமைப்பு வசதி இல்லாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது. அப்படி மீறி வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.