Advertisment

வழக்கம் போல உளறிய அமைச்சர் செல்லூரார்..

sellurraj

புதுக்கோட்டையில் இன்று காலை முதல் மதியம் வரை அமைச்சர் செங்கோட்டையன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

Advertisment

மாலை அமைச்சர் செல்லூர் ராஜூ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டுறவு துறை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து கொண்டார். ஆய்வுக்கூட்டம் முடிந்த நிலையில் வெளியே வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ ஊடகங்களிடம் பேசும் போது இந்த கூட்டத்தில் இந்த மண்ணின் மைந்தர் அமைச்சர் விஜயகுமார் பாஸ்கர் மாவட்ட ஆட்சியரும் கலந்து கொண்டனர் என்றார். அமைச்சர் செல்லூர் ராஜூவின் தெர்மாகோல் பிரச்சனைக்கு பிறகு அவரது பேச்சு ஊடகங்களால் கவனிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. இன்றைய பேச்சில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை மறந்து விஜயகுமார் பாஸ்கர் என்று வழக்கம போல உளறிவிட்டே சென்றார். இதைக் கேட்ட பலரும் வழக்கம் போல சிரித்துவிட்டனர்.

Advertisment

தொடர்ந்து இனிமேல் எந்தக் காலத்திலும திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பினார். அமைச்சர் அங்கிருந்து கிளம்பிச் சென்றாலும் அவரது பேச்சு சமூகவலைதளங்களில் சுற்றிக் கொண்டே தான் இருக்கிறது.

admk sellur raju vijayabaskar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe