'ஜீபூம் பா, ஜுமந்திரகாளி'இப்படி எதாவதுகூறி, உடனே முதல்வராகிடவேண்டும் எனஸ்டாலின் நினைக்கிறார் என்றுகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜுவிமர்சித்திருக்கிறார்.
மதுரைதெப்பக்குளம் பகுதிக்கு, நீர் கொண்டுசெல்வதற்கான கால்வாய்களை தமிழககூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜுகட்சிநிர்வாகிகளுடன் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
"பொதுநோக்கம்ஸ்டாலினுக்கு கொஞ்சம் கூட கிடையாது.அவருக்குஒரே கற்பனை, ஒரே நோக்கம் எப்படியாவது முதலமைச்சர் ஆகிடனும். 'ஜீபூம்பா, ஜுமந்திரகாளி'இப்படி எதாவது சொல்லி முதல்வர் ஆகனுன்னு நினைக்கிறார். இது நடக்குமாமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்" என்றார்.
மதுரையில்நடிகர்கள்அரசியலுக்கு வரக்கோரி ரசிகர்கள் போஸ்டர்ஒட்டுவது குறித்த கேள்விக்கு, "அவர்களுடைய ஆசையை வெளிப்படுத்துகிறார்கள். ஜனநாயக நாட்டில் இதெல்லாம் தவறல்ல" என்றார்.