நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில் அ.தி.மு.கவிலிருந்து யாரும் ரஜினி ஆரம்பிக்கப் போகும் புதிய கட்சிக்குச்செல்ல மாட்டார்கள் எனத் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''எங்க கட்சியில் இருந்து எவரும் போகமாட்டார்கள். அப்படிப் போனால்எதாவது ஏமாற்றப்பட்டு அல்லது தாங்களாகவே தங்களை ஏமாற்றிக்கொண்டு, எதையாவது எதிர்பார்த்துப் போகிறவர்கள்தான்போவார்கள். அ.தி.மு.க தொண்டர்களின் நம்பிக்கையை, செல்வாக்கைப்பெற்ற அ.தி.மு.கவின் எந்தத் தலைவனும் செல்லமாட்டான்'' என்றார்.