உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல், வேட்புமனு மறுபரிசீலனை முடிந்து தற்போது பிரச்சார களத்தை தொட்டுள்ளது உள்ளாட்சி தேர்தல் களம். அரசியல் கட்சியினர், அமைச்சர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

minister sellur raju comedy

இந்நிலையில் மதுரை விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்தகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவை செய்தியாளர்கள் சூழ, செய்தியாளர்களை பார்த்த அமைச்சர் செல்லூர் ராஜு நான் எலக்ஷன் கம்பெனிக்கு செல்கிறேன் அங்கு வாருங்கள் எனக்கூறினார்.

Advertisment

எலக்ஷன் கேம்பைன் என்று சொல்வதற்கு பதில் அப்படி சொன்னாராஇல்லை உண்மையிலேயே எலக்ஷன் கம்பெனி என்றுதான் நினைத்து சொன்னாரா தெரியவில்லை உடனே அங்கு செய்தியாளர்கள் மத்தியில் சிரிப்பலை உருவானது.