/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/972_1.jpg)
அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி மிதிவண்டியில் சென்ற விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை,இவருக்கு வயது 58. விவசாயியான இவர் இன்று மதியம் உளுந்தூர்பேட்டையில் இருந்து தனது மிதிவண்டியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குமாரமங்கலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள இனிப்பு சாலையை கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து சேலம் நோக்கி, தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் கருப்பண்ணன் பாதுகாப்பிற்காகசென்ற வாகனம் மோதி சாமிதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சாமிதுரையின் உடல் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)