Advertisment

'இவரது தலைமையிலேயே அதிமுக களம் காணும்'- அமைச்சர் ஆர்.பி உதயகுமார்!!

Minister RP Udayakumar

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்ததிலிருந்து அதிமுகவில் பெரும்விவாதத்தை எழுப்பியிருக்கிறது. அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தலுக்குப்பின் முதல்வர்எம்.எல்.ஏ.க்களால்தேர்வு செய்யப்படுவார்கள் எனக் கூறியிருந்த நிலையில்,

Advertisment

'இலக்கை நிர்ணயித்து விட்டு களத்தை சந்திப்போம், எடப்பாடியாரை முன்னிறுத்தி களம் அமைப்போம், களம் காண்போம், வெற்றி கொள்வோம் 2021 நமதே' என குறிப்பிட்டு அதிமுக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிட்விட்டர் பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில், மதுரையில் பேட்டியளித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், ஓபிஎஸ் வழிகாட்டுதல்படியும் அதிமுக செயல்படும். ஒற்றுமையுடன் தேர்தலைஅதிமுக சந்திக்க வேண்டும், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.முதல்வரை முன்னிறுத்தி தான் சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.

rajendrabalaji sellur RB uthayakumar admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe