சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பில் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த சர்வதேச தினத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி பயிலரங்கத்தைத்துணை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் சுதன், மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கையேடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் வெளியிடப்பட்டது.