உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தி்ற்கு நடுவே சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று (21/12/2019) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடக்கூடிய அனைவரும் ஒரு நிலைப்பாட்டோடும், மக்களிடத்திலே பீதி கிளப்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடும், தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு உண்மை தெரிந்தவுடன் இதிலிருந்து விலகிவிடுவார்கள்.

Advertisment

minister Rajenthra Bhalaji Condemned MK Stalin

எரிகிற வீட்டில் பிடுங்கின வரைக்கும் லாபம் என்று நினைக்கிறவர் மு.க.ஸ்டாலின். அதுமாதிரி, அவர் எங்கேயாவது பிரச்சனை உண்டாக்கி, வகுப்புவாதம், இனவாதம், மொழிவாதம்னு ஏதாவது பிரச்சனை உண்டாக்க முயற்சிக்கிறார். இதுதான் திமுக தலைவர் ஸ்டாலினோட எண்ணமாக, கொள்கையாக காலம் காலமாக இருக்கிறது. அண்ணாவுக்குப் பிறகு இருக்கின்ற திமுக தலைமை இதைத்தான் செய்து வருகிறது. ஆகவே, ஸ்டாலின் இதை முன்னிறுத்திச் செல்வது அதிசயமல்ல.

அவர்களின் வாழ்க்கை நெறிமுறையே அதுதான். ஊரு நல்லா இருக்கக்கூடாது. ஊர் இரண்டாக இருக்கவேண்டும். இரவில் கலவரம் நடக்க வேண்டும். ஒருத்தன் படப்புக்கு ஒருத்தன் தீ வைக்கணும். திமுக கலாச்சாரமே அதுதான். மொத்தத்துல ஊரு நல்லா இருக்கக் கூடாது என்பதுதான் அவரின் எண்ணம்.

Advertisment

 minister Rajenthra Bhalaji Condemned MK Stalin

இந்தியாவில், தமிழ்நாட்டில் வாழக்கூடிய இஸ்லாமியருக்கு குடியுரிமைச் சட்ட திருத்தத்தால் ஒரு பாதிப்பும் இல்லை என்று முஸ்லீம் ஜமாத்துகளே சொல்லிவிட்டன. மத்திய அரசு தெளிவாகச் சொல்லிவிட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

வங்க தேசத்திலிருந்து வந்தவர்களுக்கு, மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, என் பிணத்தின் மீதுதான் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று சொல்கிறார். அவரெல்லாம் நக்ஸலைட்டை, மாவோயிஸ்ட்டை ஆதரிக்கக்கூடியவர். தீவிரவாதத்தை ஆதரிக்கிறார். ஒரு முதலமைச்சராக இருந்துகொண்டு, சட்ட விரோத செயலைச் செய்கிறார். சட்ட விரோத செயலைத் தூண்டிவிடுகிறார்.

Advertisment

இதுபோன்ற முதலமைச்சர் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தால், அந்த மாநிலத்தை சுடுகாடு ஆகக்கூடிய நிலைமையை உருவாக்கிவிடுவார்கள். இதுபோன்ற தீவிரவாதத்தை தூண்டிவிடக்கூடிய கட்சிகளைத் தடை செய்ய வேண்டும். அப்போதுதான் இந்திய இறையாண்மைக்கு எதிரான கட்சிகள், இந்திய இறையாண்மையை நினைத்துப் பயந்து, இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரான கருத்துக்களைச் சொல்லப் பயப்படும்" என தெரிவித்தார்.