மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கோட்சே பற்றி பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்துள்ளது. இதில் பலரும் கருத்துச் சொல்வது போல கமலை மிரட்டும் விதமாகவும் பேசியுள்ளனர்.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் நகர காவல் நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜந்திரபாலாஜி மீது புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில், கடந்த 13 ந் தேதி செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் விதமாகவும், அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிராகவும் பேசியுள்ளார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.