Advertisment

'அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை!' - கே.டி.ராஜேந்திரபாலாஜி நழுவல்!

இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் -

Advertisment

"நீட் தேர்வு அதிமுக அரசு கொண்டு வந்த தேர்வு கிடையாது. மத்தியில் வலுவான எதிர்ப்பை அரசு கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நீட் தேர்வு தோல்வியால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கது. நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தற்கொலை போன்ற எண்ணங்கள் வராமல் இருக்க இறைவன் மனபலத்தைக் கொடுக்க வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தற்போது வெற்றி பெற்ற திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் இதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன். தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டுமா வேண்டாமா என்று மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்டு மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

Advertisment

rajendra balaji

இந்தி படிப்பது தவறு கிடையாது. இந்தியைத் திணிப்பதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். கட்டாயப் பாடமாக்குவதையும் எதிர்க்கும். மதுரையில் ராஜன் செல்லப்பா ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூறியது அவருடைய கருத்து. அடிமட்டத் தொண்டனாக இருந்து தற்போது பெரிய பொறுப்புகளில் இருக்கிறேன். இது போன்ற கருத்துகளைத் தெரிவிப்பது கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கிவிடும். இதற்கு நான் கருத்து சொல்லத் தயராக இல்லை.

தேனி பாராளுமன்ற உறுப்பினர் தவிர வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஏன் செல்ல வில்லை என்று கேட்கின்றீர்கள். அவர்களை யாரும் தடுக்கவில்லை. சட்டமன்றம் கூடியவுடன் அம்மா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துவார்கள்.

8 வழிச்சாலை வேண்டுமா வேண்டாமா என்று அங்குள்ள விவசாயிகளைத்தான் கேட்க வேண்டும். ஸ்டெர்லைட் மீத்தேன் என எதற்கெடுத்தாலும், கருத்து கேட்கும் கூட்டத்திற்கு பொது மக்கள் வருவதில்லை. அரசியல் கட்சியினரே வருகின்றனர். மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். குற்றம் காண்பதையே குறிக்கோளாகக் கொண்ட கட்சிகளுக்கு நாங்கள் என்ன சொன்னாலும் ஏறாது. முதல்வர் எடுத்திருக்கும் முடிவு சரியானது." என்றார்.

admk minister rajendrabalaji
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe