Skip to main content

''பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவை சுமந்தது!” -கே.டி.ராஜேந்திரபாலாஜி குறுக்குசால்!

Published on 23/06/2019 | Edited on 23/06/2019

சிவகாசியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி


“விருதுநகர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை என்பதே கிடையாது. குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி அமைச்சர்களை முடுக்கி விட்டிருக்கிறார். குடிநீர் தட்டுப்பாடு இல்லாத ஒரு மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தை வைத்திருக்கிறோம். எங்கள் கவனம் முழுவதும் மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலேயே இருக்கிறது. அதனால், உள்ளாட்சி தேர்தல் குறித்த சிந்தனை இப்போது எங்களிடம் இல்லை.   அதே நேரத்தில், உள்ளாட்சி தேர்தலோ, வேறு எந்த தேர்தலோ, அதிமுக தயார் நிலையில்தான் உள்ளது. குடிநீர் பிரச்சனையை பூதாகரமாக்குபவர்கள், அதை முழுமையாக அறிந்திருக்கவில்லை. பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள். மழைவேண்டி நாங்கள் யாகம் நடத்துகிறோம். அவர்கள், குடிநீர் பிரச்சனையைப் பெரிதாக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஜோலார்பேட்டை என்ன ஆந்திராவிலா இருக்கிறது? இல்லை, கர்நாடகத்தில் இருக்கிறதா? தமிழ்நாட்டில் உள்ள தண்ணீரையே தமிழ்நாட்டிற்குள் கொண்டுவர விடமாட்டோம் என்று தடுக்கிறார்கள். பிறகெப்படி இவர்களால் கர்நாடக தண்ணீரை கேட்கமுடியும்? இவர்கள் நடந்துகொள்வதைப் பார்த்தால், சென்னையிலுள்ள மக்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படவேண்டும் என்றல்லவா செயல்படுகிறார்கள்? திமுக இரட்டை வேடம் போடுகிறது. அதுவும் பகல் வேடம். திமுக நடத்தும் நாடகம், நடிப்பையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  

minister rajendra balaji

அண்ணாவின் கொள்கை எதனை நாங்கள் காற்றில் பறக்கவிட்டோம்? கி.வீரமணி கடவுள் இல்லை என்கிறார். நாங்கள், கடவுள் இருக்கிறார் என்று சாமி கும்பிடுகிறோம். எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோவிலில்போய் சாமி கும்பிட்டார். அண்ணா மீதுள்ள மரியாதையில் அண்ணா திமுக என்று பெயர் வைத்தார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றுதான் அண்ணாவும் சொன்னார். எங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. மக்கள் நலமாக இருக்கவேண்டும் என்று யாகம் நடத்துகிறோம். கி.வீரமணி போன்றவர்களுக்கு எங்களைக் கிண்டலடிப்பது, கேலி பேசுவவது வாடிக்கையாகப் போய்விட்டது. அவருக்கு இதுவே ஒரு தொழிலாகிவிட்டது. ஜெயலலிதாவும் திருப்பதி போனார். எல்லா கோவில்களுக்கும் போனார். நாங்களும் வெள்ளிக்கிழமை என்றால் கோவிலுக்குப் போகிறோம். கோவிலுக்குப் போவது எங்களுடைய இயல்பு.
 

தி.க.வுக்கு என்ன கொள்கை இருக்கிறது? வீரமணிக்கு என்ன கொள்கை இருக்கிறது. அவருக்கு இந்துக்களை அழிக்கவேண்டும். இந்துக்களை ஒழிக்க வேண்டும். இந்துக் கடவுள்களை அழிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கொள்கை. வேறு கொள்கை கிடையாது. அவருக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது. அதற்காக இப்படி பேசிக்கொண்டிருக்கிறார். அவருடைய வாயைப் பசை வைத்து ஒட்ட வேண்டியதுதான். நாங்கள் சாமி கும்பிடத்தான் செய்வோம். வீரமணி பேச்சைக் கேட்கமாட்டோம். 
 

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் என்ற பல்லக்கைத் தூக்கியதால்தான் திமுக வெற்றி பெற்றது. தமிழகத்தைப் பொறுத்தமட்டிலும் காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். நேரு குடும்பம்; ராஜீவ் குடும்பம்; அவர்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக மக்கள் அளித்த வாக்குகள்தான், திமுக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவைச் சுமந்தது. திமுக, காங்கிரஸை சுமக்கவில்லை. மற்ற கட்சிகளை வேண்டுமானால் திமுக சுமந்திருக்கலாம்.” என்றார்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.