Advertisment

“யார் வேண்டுமானாலும் வாயில் வடை சுடலாம்..” - அமைச்சர் பி.டி.ஆர். கிண்டல்!  

Minister PTR addressed press

Advertisment

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவகத்தை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஒன்றிய அரசு பல இடங்களில் காட்டாத அடிப்படை மனிதநேயமே, நமது முதல்வருக்கும், இந்த ஆட்சிக்கும் ஒரு அடையாளம்.

யார் வேண்டுமானாலும், வாயில் வடை சுடலாம். எத்தனையோ வாக்குறுதிகளை, யாரோ கொடுத்து இதுவரை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், இவ்வளவு வாக்குறுதிகளை கொடுத்து ஒரே ஆண்டில் பலவற்றை நம் அரசு நிறைவேற்றியுள்ளது. மேலும், மீதமிருக்கும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என உறுதிமொழி கொடுத்து எங்களை எல்லாம் தினமும் விரட்டிக்கொண்டிருக்கிறார் முதல்வர். இது தான் செயல்திறன்” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையர் & திரைப்பட நடிகர் சூரி ஆகியோர் உடனிருந்தனர்.

madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe