இன்று (13-12-2021) உலகப் புகழ்பெற்ற சென்னை அண்ணாசாலை தர்காவில், நவம்பர் 27 எளியோரின் எழுச்சி நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு தங்க காசு, இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத் தொகை, 2000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி ஆகியவை வழங்கப்பட்டன.

முன்னாள் எம்.பி., த. மஸ்தான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நே. சிற்றரசு முன்னிலை வகித்தார். அதேபோல் அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் கே.எஸ். மஸ்தான், ஜெ.எம். பஷீர் மற்றும் பல தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Advertisment