திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், "மக்கள் பணிகளுக்காகவே திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் அமைச்சர்கள் தங்கியிருக்க முதல்வர் கூறினார். அரசியல் ரீதியாக அமைச்சர்களைச் சென்னையில் தங்கியிருக்க முதல்வர் கூறவில்லை. தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்தே அமைச்சர்கள், திங்கள்,செவ்வாய்,புதன்கிழமை சென்னையில் இருப்பர்" என்றார்.
அக்டோபர் 5,6,7- ல் சென்னையில் தங்கியிருக்கச் சொன்னதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார்.