2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாகச் செம்மண் எடுத்து இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனால் அரசிற்கு 28.37 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் பொன்முடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தநிலையில் தற்போது அந்த மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.