Advertisment

அரசுக் கல்லூரி முதல்வர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை

Minister Ponmudi consults with principals of government colleges!

Advertisment

சென்னையில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுடன் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். இதில், உயர் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் பொன்முடி, "காலை மற்றும் மாலை என இரு வேளை கல்லூரி வகுப்புகள் திட்டத்தைக் கொண்டு வந்தது தி.மு.க. அரசுதான். 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,31,171 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. நான் முதல்வன் திட்டம் மூலம் அரசு கல்லூரிகளில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் நவம்பர் 23ஆம் தேதி துணைவேந்தர் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.

Speech minister
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe