The Minister played music in drums

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத்தமிழக செய்தித் துறை அமைச்சர் பெ. சாமிநாதன் மற்றும் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் திங்கள்கிழமை இரவு சிதம்பரம் நகருக்கு வருகை தந்தனர். இவர்கள் இரவு 9 மணிக்கு மேல் வந்ததால் சிதம்பரம் நகரின் பழமை வாய்ந்த கோவிலாக உள்ள தில்லை அம்மன் கோவில் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச்சென்று வழிபட்டனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்கள். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை இவர்கள் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள இசைக் கல்லூரிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அமைச்சரின் வருகையையொட்டி பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் மற்றும் இசைக் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் வரவேற்றனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற நாட்டியம், பாட்டு உள்ளிட்டவற்றைஅமைச்சர்கள் கண்டு ரசித்தனர். இசைக் கல்லூரியில் பழங்கால வாத்தியமான போர் முரசு உள்ளிட்ட பல்வேறு வகையான வாத்தியங்கள் மற்றும் கருவிகள் இருந்தன. போர் முரசை பார்த்த தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முரசை அடித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் இதனை வியப்புடன் பார்த்து மகிழ்ந்தனர். இதனை அருகே இருந்து பார்த்த செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஊக்கப்படுத்தினார்.