minister personally consoled families of the victims of accident

ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மாம்பாக்கம் வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த 20 பேர் ஒரு சுற்றுலா வேனில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு அதே வேனில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். இவர்கள் வந்த வேன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் சென்னை திருச்சி ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இழந்து சாலையின் இடது புறத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராமலிங்கம், முருகன் ,சக்தி ,செல்வம் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 13 பேர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்..

தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து வாகனத்தின் முகப்பு பகுதியில் நவீன இயந்திரம் கொண்டு உடைத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். மேலும் விபத்தில் காயமடைந்த 14 பேர் உடனடியாக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்வி மருத்துவமனைக்கு திருச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு காயம் மனிதர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

உயிரிழந்த ஆறு பேரின் உடல்கள் உடற்குறைக்குப் பின் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று காலை ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கைத்தறி கதர் துறை அமைச்சரான காந்தி, இறந்த ஆறு பேர் குடும்பத்திற்கும் நேரில் சென்று இறந்தவர்களின் உடலுக்கு மலர்களையும் வைத்து அஞ்சலி செலுத்தினார். இறந்தவரின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார். அதோடு அரசு வழங்கிய இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையினை ஒவ்வொரு குடும்பத்தாரிடமும் வழங்கினார்.