முப்படை தளபதி நினைவாக மரக்கன்று நட்டு அமைச்சர் அஞ்சலி!

Minister pays homage to general bipin rawat

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விமான விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் (வயது 63), மற்றும் அவரது மனைவி உள்பட ராணுவ வீரர்கள் 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு விமான விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் நினைவாக பள்ளி வளாகத்தில் 13 மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து முப்படைத் தளபதி பிபின் ராவத் படத்திற்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Minister pays homage to general bipin rawat

அதன் பிறகு நாட்டின் பாதுகாப்புக்காக ஓய்வில்லாமல் உழைத்த முப்படைத் தளபதி மற்றும் ராணுவ வீரர்கள் நினைவாக நடப்பட்டுள்ள 13 மரக்கன்றுகளையும் மாணவிகள் பராமரித்து வளர்க்க வேண்டும் என கூறினார். மேலும் இந்த ஒவ்வொரு மரங்களும் அவர்களின் பெயரைச்சொல்லும் என்று கூறினார். தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Keeramangalam Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe