Advertisment

“பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க விடாமல் சில சக்திகள் இயக்குகின்றன” - நிதியமைச்சர் பிடிஆர்

minister Palanivel Thiagarajan tweet about petrol diesel price

Advertisment

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின்மதிப்பு குறைந்தும்இந்தியாவில் ஏன் இன்னும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என நிதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா 85% அளவிலான எரிபொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலைமாற்றம் வெகு விரைவாக இந்தியாவில் எதிரொலிக்கும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது குறைந்து காணப்படுவதால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இந்தியாவிலும் குறையலாம் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமின்றி 200 ஆவது நாளாக விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுக்கும், டீசல் ரூ.94.24 காசுக்கும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பதிவில், "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மதிப்பும் குறைந்தும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை ஏன் இன்னும் குறையவில்லை? பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க விடாமல் சில சக்திகள் பாதுகாக்கின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe