minister o.s.manian in self quarantine

தனது மனைவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, அமைச்சர் ஓ.எஸ். மணியன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

Advertisment

தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவால் கடந்தவாரம் சென்னையில் காலமானார். இதனையடுத்து அவரது இறுதிச்சடங்கு கடந்த வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான வேதாரண்யத்தை அடுத்த ஓரடியம்புலத்தில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் அறிவித்துள்ளார்.

Advertisment