திருப்பத்தூர் மாவட்டத்தை தொடங்கிவைக்க திருப்பத்தூர் நகரத்திற்கு, வருகின்ற 28ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிச்சாமி வருகை தர உள்ளார். இதற்காக திருப்பத்தூர் நகரில் உள்ள தொன்போஸ்கோ பள்ளி மைதானத்தில் விழா நடைபெறுகிறது. இதற்கான விழா மேடை அமைக்கும் பணிக்காக பந்தகால் நட்டு பணியை தொடங்கி வைத்தார் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/veeramani in_0.jpg)
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர். விழாவிற்கு வரும் முதல்வருக்கான பாதுகாப்பு பணிகள் தொடர்பாக திருப்பத்தூர் புதிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆய்வு செய்துள்ளார்.
அமைச்சர் வீரமணிக்காக தனிப்பட்ட முறையில் அவர் கேட்டதையெல்லாம் முதல்வர் செய்து தந்துள்ளார் என்பதால் அதில் மகிழ்ச்சியான வீரமணி, திருப்பத்தூர் நகரத்துக்கு வரும் முதல்வருக்கு, இந்த மாவட்டத்தின் சார்பில் பிரமாண்டமான வரவேற்பு தரவேண்டும், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி நகரில் உள்ள முக்கியமான அமைப்புகள், சங்கங்கள் என அனைத்தின் பிரிதிநிதிகளும் வரவேண்டும் என தனது ஆதரவாளர்களிடமும், கட்சி நிர்வாகிகளிடம் அமைச்சர் வீரமணி கூறியுள்ளதால் தடபுடலான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
Follow Us