திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2020 – 21 ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடையைத் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து, கிழக்குறிச்சியில் புதிதாக அமைய உள்ள பூங்கா அமைவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வில் ஒன்றியக் கழகச் செயலாளர் மாரியப்பன், பகுதி கழகச் செயலாளர் இ.எம். தர்மராஜ், நத்தம்மாடிப்பட்டி ஊராட்சித் தலைவர் ஜெயராஜ் ஜோஸ்பின், கங்காதரன் பாலமுருகன், ரமேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நகர் நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.