Advertisment

பயணியர் நிழற்குடை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர்!

Minister opens passenger canopy, overhead reservoir for public use!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வின் திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (26/03/2022) பயணியர் நிழற்குடை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

Advertisment

மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் K.S.M.கருணாநிதியின் உறுப்பினர் நிதியில் இருந்து பத்தாளப்பேட்டையில் செட்டியார் பேட்டை, கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் எழில்நகர் ஆகிய இரண்டு இடங்களிலும் தலா 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டப் பயணியர் நிழற்குடை திறப்பு விழாவும், அதனைத் தொடர்ந்து, மக்களின் பயன்பாட்டிற்காக ஒன்றிய கவுன்சிலர் ஆ.மகாதேவனின் உறுப்பினர் நிதியில் இருந்து மேலகலமலை, குவளக்குடி உள்ளிட்டப் பகுதியில் 9.83 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வுகளின் போது கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி பகுதியில் தனது கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

Advertisment

Minister opens passenger canopy, overhead reservoir for public use!

இந்நிகழ்வுகளில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரனும், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் K.S.M.கருணாநிதி, ஒன்றிய பெருந்தலைவர் கோ.சத்யா கோவிந்தராஜ், ஊராட்சி தலைவர் அழகு செந்தில் ஆகியோரும் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும், தொண்டர்களும் கலந்துக் கொண்டார்கள்.

minister trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe