Advertisment

நடிகர் சூரியின் உணவகத்தைத் திறந்து வைத்த அமைச்சர்! (படங்கள்) 

Advertisment

மதுரை மாவட்டத்தில் உள்ள ராஜாஜி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சூரியின்உணவகத்தைதமிழக நிதியமைச்சர்பிடிஆர்பழனிவேல்தியாகராஜன் இன்று (24/06/2022) திறந்து வைத்தார். இந்த விழாவில் மதுரை மாநகராட்சிமேயர்இந்திராணி, மருத்துவமனைடீன்ரத்தினவேல்,மருத்துவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர்கலந்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சூரி, "அமைச்சர்பழனிவேல்தியாகராஜன்தான் மருத்துவமனையில் தனது உணவகம்திறக்கப்படகாரணம். அவருக்கு நன்றி. விடுதலை படம் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது. படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.இயக்குநர் வெற்றிமாறன் மிகவும் மெனக்கெட்டு உள்ளார். விடுதலை படத்தில் நான் இருப்பதேஎனக்குபெருமையாக உள்ளது. விஜய் சேதுபதியும் படத்தில் இருப்பதால்,இதற்குதனி அந்தஸ்து கிடைத்து விட்டது. இந்தியாவிலேயே முக்கியமான படமாக விடுதலை இருக்கும். மக்களுக்கான படமாகவும்,அவர்களைசிந்திக்க வைக்கும் படமாகவும் இருக்கும்" எனத் தெரிவித்தார்.

restaurant hospital madurai ptr palanivel thiyagarajan minister
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe