சபாநாயகருடன் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்குவாதம்; ஆளுநர் குறித்து பேச அனுமதிக்காததால் வெளியேறினார்

நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் ஆய்வு பற்றி சட்டசபையில் பேசக்கூடாது என சபாநாயகர் அறிவித்திருந்தார். ஆளுநரின் ஆய்வு குறித்து பேச அனுமதிக்காததால் திமுக வெளிநடப்பு செய்தது.

os maniyian

அதை தொடர்ந்து அதிமுக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் திமுகவின் வெளிநடப்பு பற்றியும் ஆளுநரின் இந்த ஆய்வுக்கு முன்னதாக ஆளுநரின் கடந்தகால நடவடிக்கைகள் பற்றியும் பேச சட்டசபையில் அனுமதி கோரினார். ஆனால் சபாநாயகரோ ஆளுநர் குறித்துபேசக்கூடாது என ஏற்கனவே கூறியிருப்பதாக விளக்கினார். ஆனால் அப்போதும் விடமால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆளுநர் குறித்து பேச அனுமதி கோரினார் .

உடனே எழுந்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆளுநர் பற்றி அவையில் பேசக்கூடாது என சபாநாயகரால் குறிப்பிட்டபட்டிருக்கும் பொழுது ஆளுநர் குறித்துஅமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும்பேசவேண்டாம்என அறிவுறுத்தினார். உடனே தனது உரையை நிறுத்திய ஓ.எஸ்.மணியன் அமைச்சர் தனது இருக்கையில் அமர்ந்தார். சிறுது நேரம் கழித்து தானே சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஓ.எஸ்.மணியன்.

admk governor OM Maniyan's
இதையும் படியுங்கள்
Subscribe