Advertisment

“அனைத்து வசதிகளும் அதிகமாக செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் கே.என்.நேரு

minister nheru about trichy new bustand

திருச்சிபஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் மாநகர பேருந்து நிறுத்துமிடம், தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம், லாரிகள் முனையம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், அஞ்சல் நிலையம் மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகளுடன்அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டங்களுக்கும் ரூ.900 கோடி மதிப்பீடு வழங்கப்பட்டது. அதில் அரசு முதல்கட்டமாக ரூ.460 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தது.

Advertisment

இந்நிலையில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகளை 349.98 கோடி மதிப்பில் மேற்கொள்வதற்கு தமிழக முதல்வர் கடந்த 2021 டிச.30ம் தேதி அடிக்கல் நாட்டினார். இதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 2022 ஜூன் 13ம் தேதி நிர்வாக அனுமதி வழங்கியது. இந்த பேருந்து முனைய பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வரும்போது 2 லட்சம் மக்களை கையாளும் அளவிற்கு மிக தரமானதாகவும், பெரிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை வருகின்ற மே மாதம் 9-ந்தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் விழா முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (05.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர்செய்தியாளர்களை சந்தித்த அவர், “மே 8ஆம் தேதி மதியம் திருச்சி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அன்றைய தினம் மாலை கட்சியினரை சந்திக்கிறார். மறுநாள் 9ஆம் தேதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைத்து, அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய மார்கெட்டுக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் 50 ஆயிரம் பேருக்கு பட்டா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய வசதிகள் குறித்த கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், “பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கு அனைத்து வசதிகளும் அதிகமாக செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பேருந்து நிலையம் கட்டுமான பணியின் போது கழிவறை வசதிகள் செய்யப்படாமல் இருந்தது அதனை கவனத்தில் கொண்டு அதிக கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது .குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது ஆர்வோ வாட்டர் தயார் நிலையில் இருக்கிறது உணவகம் மற்றும் தேநீர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது, அதேபோன்று பிற பகுதிக்கு செல்லக்கூடிய வகையில் வாகன வசதிகள் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது, உய்யக்கொண்டான் வாழ்க்கையில் கழிவுநீர் கழிப்பதாக இருந்த குற்றச்சாட்டு தவறு எனவும் சுத்தம் செய்யக்கூடிய கழிவுகள் தான் அங்கு ஊற்றப்படுகிறது எனவும் அது விவசாயத்துக்கு பயன்படும் என தெரிவித்தார், புதிய காவிரி பாலம் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தேர்தலுக்கு முன்பு டிசம்பர் மாத இறுதியில்அதனை திறப்பு விழா காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும்மேலும் பழைய பாலம் இரு புறங்களிலும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கட்டப்பட்ட பாலமாகவும் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் என இரண்டு முதல்வர்கள் தான் பாலங்கள் கட்டினார்கள் என தெரிவித்தார்,

நடிகர் விஜய் நேரடியாக குற்றச்சாட்டு வைக்கின்றார் தேர்தலுக்கு சவாலாக இருக்குமா? என்ற கேள்விக்கு, “ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசலாம். தேர்தல் என்பது போர்க்களம். அதில் மக்கள் முடிவு செய்வார்கள். மக்களை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்கண்டிப்பாக வெற்றி பெறுவோம் யார் வந்தாலும் திமுக எதிர்கொள்ளும்” என்றார். உள்ளாட்சி தேர்தல் குறித்த கேள்விக்கு, “நகர்புற உள்ளாட்சி நடை பெற்று வருகிறது.உள்ளாட்சிக்கு 370 பஞ்சாயத்து நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைந்துள்ளது, பஞ்சாயத்து யூனியன்களை பிரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நீதிமன்ற உத்தரன்படி பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார்.

trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe