திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், பழனியாண்டி,சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.