Advertisment

திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர்! சிக்கிக்கொண்ட ரிஜிஸ்ட்ரார்..!

சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தைப் பார்வையிட வந்த வணிக வரித்துறை அமைச்சர், அங்கு மக்களின் கூட்டம் அலை மோதியதைக் கண்டு, “ஏன் இவ்வளவு கூட்டம்” என்று கேட்டுள்ளார். அதற்கு பொதுமக்கள், “ரிஜிஸ்ட்ரார் இல்லை, அதுதான் இவ்வளவு கூட்டத்திற்கும் காரணம்” என்று சொல்லியுள்ளனர்.

Advertisment

உடனடியாக அமைச்சர் மூர்த்தி, ரிஜிஸ்ட்ரார் செந்தூரப்பாண்டியனை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். ஆனால், ரிஜிஸ்ட்ரார் செந்தூரபாண்டியன் அந்த தொடர்பை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் மூர்த்தி அங்குள்ள வீடியோ ஃபுட்டேஜை எடுக்கச்சொல்லி, “அவர் எந்த நேரத்திற்கு உள்ளே வந்தார். எப்போது வெளியில் சென்றார்”என்று கேள்வி எழுப்பினார்.

Advertisment

சில நேரம் கழித்து அவசர அவசரமாக உள்ளே வந்த ரிஜிஸ்ட்ராரை “இப்படித்தான் வேலை பார்ப்பீர்களா. எப்போ வந்தீங்க..” என்றதும், “10 மணிக்கு” என்றார். “எப்போ வெளியில் போனீங்க” என்றதுக்கு, “10.40 மணிக்கு” என்றார். “என்ன வேலையாக போனீங்க..” “ஐ.ஏ.எஸ் வரச்சொல்லியிருந்த காரணத்தினால் போனேன்”, “ஐ.ஏ.எஸ் இங்கே இருக்கிறார். நீங்க எந்த ஐ.ஏ.எஸ்ஸ பாக்கப் போனீங்க..” என்று அடுத்தடுத்து கேள்விகளை முன்வைத்து அமைச்சர் கேட்டுக்கொண்டே இருந்தார். “படித்த இளைஞர்கள் வேலையில்லாமபல பேர் இருக்காங்க, நீங்க என்னவென்றால் வேலையை வாங்கிக்கொண்டு ஆட்டம் போடுறீங்க என்று உங்களையெல்லாம் சஸ்பெண்ட் பண்ணா கூட திருந்த மாட்டீங்க” என்று பேசியுள்ளார். இதனால் தேனாம்பேட்டை ரிஜிட்டர் அலுவகத்தில் உள்ளே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு பொது மக்கள் அமைச்சரை நடவடிக்கை பாராட்டி உண்மையிலே நல்லாட்சி நடைபெறுகிறது என்றனர். “அனைத்து பத்திரப்பதிவுகளிலும் அரசு நிர்ணயித்த தொகையைவிட பத்திரப்பதிவுக்கு கூடுதல் தொகையை வாங்க கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு துறைகளில் ஆய்வுசெய்து அனைத்துத் துறைகளில் பொதுமக்கள் எளிமையாகப் பயன்பெறும் வகையில் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.

அதன்படி, சைதாப்பேட்டையில் உள்ள பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்தில் பத்திரப்பதிவு எப்படி நடக்கிறது என்பதை அறிய ஆய்வுசெய்யவந்தோம். தமிழ்நாட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் தவறான பத்திரப்பதிவு தொடர்பான புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை உள்ளது.அதில், தினந்தோறும் 150 புகார்கள் வருகின்றன. அதுதொடர்பாக, நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. புகார் தெரிவிப்பதற்கான எண் அனைத்து அலுவலகத்திலும் டிஜிட்டல் அல்லது எழுத்துப்பூர்வமாக வைக்கப்படும். ஊரடங்கு காலத்திற்குப் பின்னால் பத்திரப்பதிவு எவ்வித இடையூறுமின்றி நடைபெற்றுவருகிறது. கடந்த காலத்தைக் காட்டிலும் தற்போது பத்திரப்பதிவு அதிகமாக நடைபெற்றுவருகிறது. தவறுகள் நடைபெற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்” என்றார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe