Skip to main content

கிராமத்தில் புகுந்த வெள்ள நீர்; நேரில் ஆய்வு செய்த அமைச்சர்

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

Minister MRK Panneerselvam visited inspected the flooded villages

 

கர்நாடக மாநிலத்தில் அதிக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் உபரி தண்ணீர் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் அதிகமான அளவுக்கு  செல்கிறது. கீழணையில் 8 அடி தண்ணீரை மட்டுமே தேக்க முடியும்  என்பதால் கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

 

இதனால் கொள்ளிடம் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் சிதம்பரம் அருகே உள்ள தீவு கிராமங்களான அக்கரை ஜெயங்கொண்டம், கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டூர் ஆகியவற்றில் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்தது. பொதுமக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

 

வருவாய், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இக்கிராமங்களில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில்  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் வெள்ள நீர் சூழ்ந்த தீவு கிராமங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களிடம் எத்தனை நாட்களாக தங்கி இருக்கிறீர்கள். உணவு, குடிநீர் வழங்கப்படுகிறதா? தேவையான வசதிகள் செய்து தரப்படுகிறதா? என்றும் கேட்டறிந்தார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் அதிக மழை பெய்வதால்  இந்த பகுதி 5 வது முறையாக தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று  இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர். தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள பொதுமக்களை மீட்டு புயல் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.  தண்ணீர் சூழ்ந்த கிராமங்களில் மட்டும் பாதிக்கப்பட்ட வயல்கள், வீடுகள் கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிவபுரி- பெராம்பட்டு சாலை சீரமைக்கப்படும்" என்றார். 

 

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் .பாலசுப்ரமணியம், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவி, சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் குமார், ஞானசேகர், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், சிதம்பரம் எஸ்.பி ரகுபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Release of special election report

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சிதம்பரத்தில் உள்ள ஜெயங்கொண்டபட்டிணம் என்ற இடத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார். இதனை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த தேர்தல் அறிக்கையில், “வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும். டாகர்.அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்கப்பட வலியுறுத்தப்படும்.

இந்திய தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இலங்கை பிரச்சனையில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்க நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். தமிழக ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கக் கூடாது. மின்னணு வாக்கு எந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.

பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி அமைக்கப்படும். உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு வழியாக தமிழை அறிவிக்க வேண்டும். பாசிச சக்திகளை அகற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். இந்துத்துவ சக்திகளால் பாதிக்கபட்டவர்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை விசிக மேற்கொள்ளும். காஷ்மீர் பிரச்சனை அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படக் கூடாது.

ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்த ஊழல் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். ராமர் கோயில் திறப்பு விழா நடந்துள்ள நிலையில் நீதிமன்ற ஆனைப்படி மசூதிக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை அவசியம் எடுக்கப்படும். மத்திய மற்றும் மாநில அளவில் பொது லோக்பால் அமைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் பொது மக்களும் பங்கேற்கும் வகையில் அதற்கான கண்காணிப்புக் குழுவையும் உருவாக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.