Advertisment

உள்ளாட்சி தேர்தல்: கட்சியினருடன் அமைச்சர் எம்ஆர்கே ஆலோசனை!

hjk

Advertisment

சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவக்கல்லூரி செல்லும் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அண்ணாமலைநகர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக வெற்றி பெருவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பங்ககேற்று தேர்தலில் பொதுமக்கள் மத்தியில் எவ்வாறு வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும், திமுக ஆட்சி அமைந்த பிறகு செய்த சாதனைகள் குறித்து வீடுவிடாகச் சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் திமுக ஆட்சியில் இருப்பதால் திமுகவிற்கு வாக்கு அளித்தால் தான் பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைக் கொண்டுவர முடியும் என்பதை பொதுமக்கள் மத்தியில் விளக்கி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட அண்ணாமலைநகர் பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் 15 வார்டுகளை சேர்ந்த வேட்பாளர்கள் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், அண்ணாமலைநகர் பகுதியிலிருந்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் குமராட்சி திமுக ஒன்றிய செயலாளர்கள் சங்கர், ராஜேந்திரகுமார், நடராஜன். மாவட்ட ஆதிதிராவிடநலக்குழு அமைப்பாளர் பரந்தாமன், பேரூர் கழக செயலாளர் முத்துகுமார், பொருளாளாரும் 5-வது வார்டு வேட்பாளருமான பழனி, தகவல் தொழில்நுட்பஅணி பொறுப்பாளர் அருள்வேலன், தேர்தல் பொறுப்பாளர் சுப்பு (எ) வெங்கடேசன், ஒன்றிய பொறுப்புக்குழு பொருப்பாளர் மஞ்சு, உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe