பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து, சென்னை பல்லவன் இல்லத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

Minister-MR-Vijayabaskar-press-meet

Advertisment

Advertisment

அப்போது, "பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 29,213 பேருந்துகள் இயக்கப்படும். சென்னையிலிருந்து 4,950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இவை 10ஆம் தேதி முதல் 14 தேதி வரை பேருந்துகள் இயக்கப்படும். இதற்காக 17 முன்பதிவு கவுன்ட்டர்கள் கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை மூலம் பேருந்து இயக்கம் கண்காணிக்கப்படும். சுங்கச்சாவடிகளில் பேருந்துகளுக்காக தனிப்பாதை ஒதுக்கப்பட்டு தடையின்றி பேருந்துகள் செல்லும்" என தெரிவித்தார்.