Skip to main content

கவனம் ஈர்த்த பேனர்; நரிக்குறவர் இல்லத் திருமண விழாவில் அமைச்சர்!

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Minister Meyyanathan participation in the marriage ceremony at Narikuravar

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அறிவொளி நகரில் (நரிக்குறவர் காலனி) எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அங்கு வைக்கப்படும் பதாகைகள் வித்தியாசமாகவும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைப்பதாகவும் இருக்கும். அதேபோல் இன்று அந்த பகுதியில் நடக்கும் பாலமுருகன் - பானு திருமண விழாவிற்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பதாகை அந்த வழியாகச் செல்லும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

ad

ஒரு பிரபலமான நாளிதழ் மாடலில் அமைக்கப்பட்டுள்ள அந்த பதாகையில் திருமண சட்டப்படி 2 ஆண்டுகளாகக் காதலித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை! என்றும் வாழ்த்துவோருக்கு கல்யாணப் பந்தியில் கலவரம்! பந்தியில் பலகாரம் திருட்டு 3 பேர் கைது! மணப்பெண் தேவை! எனப் பல்வேறு தலைப்புகளில் செய்திகள், விளம்பர வடிவில் அமைக்கப்பட்ட அந்த பதாகையைப் பார்த்த அனைவரையும் கவர்ந்து இழுத்தது. அதேபோல அறிவொளி நகரில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்ளும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இந்த திருமணத்திற்கும் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

Minister Meyyanathan participation in the marriage ceremony at Narikuravar

அப்போது திடீரென ஒரு புதுமணத் தம்பதி மாலையும் கழுத்துமாக வந்து நிற்க அவர்களையும் வாழ்த்தி கல்யாணப் பரிசுகள் வழங்கினார். நாங்கள் அமைச்சரை போய் அழைக்கவில்லை என்றாலும் எங்கள் இல்லங்களில் நடக்கும் எல்லா விழாக்களுக்கும் தகவல் தெரிஞ்சாலே வந்துடுவார். அப்படித்தான் இன்றும் வந்து வாழ்த்தினார். இன்றைக்கு 2 ஜோடிகளை வாழ்த்தி கல்யாணப் பரிசு தந்திருக்கிறார். பழங்குடியினர் மக்கள் மீது எப்பவும் பாசமாக இருக்கும் அமைச்சரை எப்பவும் மறக்கமாட்டோம் என்றனர்.

Minister Meyyanathan participation in the marriage ceremony at Narikuravar

அமைச்சர் மெய்யநாதனோ, “கீரமங்கலம் அறிவொளி நகர் மட்டுமின்றி எனது தொகுதியில் மட்டும் இல்லாமல் நான் செல்லும் வழியில் உள்ள ஊர்களில் இதுபோன்ற பழங்குடியினர் வீடுகளில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவங்க அழைக்கவில்லை என்றாலும் நான் போய்விடுவேன். திடீரென நான் போனதும் அவங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது. அந்த மகிழ்ச்சி தான் எனக்கும் மகிழ்ச்சி. கடந்த 3 வருடமாக அறிவொளி நகரில் நடக்கும் திருமண விழாக்களுக்கு எனக்கு அழைப்பு இல்லை என்றாலும் கூட என் மேல் உள்ள பாசத்தில் என் படம் போட்டு பதாகை வைக்கிறார்கள். தகவல் தெரிஞ்சா உடனே வந்துவிடுவேன். இன்று கூட ஒரு திருமண தகவல் தெரிஞ்சது. ஆனால் உள்ளே வந்ததும் இன்னொரு திருமண ஜோடி வந்தாங்க. அவங்களையும் வாழ்த்தினேன். பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து படித்து அவர்களும் நல்ல வேலைகளுக்கு போகவேண்டும் என்று ஒவ்வொரு இடத்திலும் பேசி படிப்பை தூண்டி வருகிறேன். இப்போது அறிவொளி நகரில் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“காவல்துறையின் அலட்சியத்தால் பறிபோன 20 உயிர்கள்” - இளைஞர்கள் வேதனை!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
20 lives lost due to the negligence of Pudukkottai police

விழுப்புரம் மாவட்டம் ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த  பழனிவேல் மகன் லோகேஷ் (23), அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் கோகுல் (25), பூவன் மகன் பாரதி (29). இவர்கள் 3 பேரும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கூலி தொழிலாளயாக பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த வாரம் லோகேஷ் பிறந்தநாள் விழாவுக்காக 3 பேரும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர் . பின்னர் ( ஜூலை 14) ஞாயிற்றுக்கிழமை 3 பேரும்  இருசக்கர வாகனத்தில் பண்ருட்டி நகரத்திற்கு  வந்து வேலையை முடித்துவிட்டு  இரவு 8 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மனம்தவழ்ந்தபுத்தூர் கிராம பிள்ளையார் கோவில் அருகே செல்லும் போது எதிரே வந்த டாரஸ் லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில்  மோதியதால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது பற்றி தகவல் தகவல் அறிந்த புதுப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு  சென்று விபத்தில் சிக்கிய  3 உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரைணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மனப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கூறுகையில், “இந்த விபத்து புதியது அல்ல.  கடந்த 10 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட விபத்துகள் இதுபோன்று நடைபெற்றுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் பலியாகியுள்ளனர். உதாரணத்திற்கு கடந்த 1 ஆண்டுக்கு முன் மேல் அருங்குணத்தை சேர்ந்த 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது எதிரே வந்த கார் மோதி 2 பேர் பலியானர்கள். ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று உயிர் தப்பினர். அதேபோல் 6 மாதத்திற்கு முன் அதே ஊரைச்சேர்ந்த ஒருவர் பேருந்தில் மோதி உயிர் பலியானார். இதுபோன்ற எண்ணற்ற உயிர்கள் பலியாகியுள்ளது. இந்த விபத்து நடந்த இரண்டு நாட்கள் மட்டும், விபத்து நடந்த இடத்தில் பேரிகார்டு வைப்பார்கள். அதன் பிறகு எடுத்து சென்றுவிடுவார்கள். இதனால் தொடர்ந்து உயிர் பலி ஏற்பட்டு வருகிறது.

மேலும் புதுப்பேட்டை காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு முன்பு நின்று கொண்டு இரவு நேரத்தில் கூலி வேலை செய்துவிட்டு வருபவர்களை தடுத்து நிறுத்தி வசூல் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். காக்கிச்சட்டையை பார்த்துவிட்டு சிலர் வேகமாக செல்லும் போது இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடைபெறுகிறது. புதுப்பேட்டை காவல்நிலையம் கிராமபுறங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இங்கு நடைபெறும் பல்வேறு குற்றச்செயல்களை உளவு பிரிவு , தனிபிரிவு காவலர்கள் காவல்நிலையத்தில் உள்ள காவலர்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிப்பது இல்லை. அவர்கள் சரியாக செயல்பட்டால் இங்கு குற்றங்கள் அதிக அளவு நடைபெறாது.

புதுப்பேட்டை காவல்துறையினர் வசூல் செய்வதில் காட்டும் ஆர்வம் 1 பங்கு கூட கடந்த 10 ஆண்டுகளில் இந்த இடத்தில் 50-க்கும் மேற்பட்ட விபத்துகள் 20-க்கும் மேற்பட்ட உயிர் பலி வாகன விபத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது.  மேலும் வாகன சோதனையில் போலீசார் தடுத்து நிறுத்தி நிற்க வைத்த பிறகு  வாகன சோதனை கூட்டம் அதிகம் ஆனால் ஏற்கனவே நிற்க வைத்த இளைஞர்கள் போலீசை ஏமாற்றிவிட்டு வாகனத்தை எடுத்து செல்வதைப் பார்த்து விட்டால் அவர்களை போலீசார் துரத்தும் போது இதுபோன்ற விபத்து நடைபெறுகிறது. அல்லது அவர்கள் வண்டியை நிறுத்த கூறும் போது நிறுத்தாமல் சென்று விட்டால் அவர்களை விரட்டுவதால் இதுபோன்ற விபத்துகள் இந்த இடத்தில் நடைபெறுகிறது

இனிமேலாவது காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அடிக்கடி விபத்து நடைபெறும் இடத்தில் இருள் இல்லாமல் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். விபத்தை தடுக்கும் வகையில் பேரிகார்டில் ஒளிர்பான்கள் ஒட்ட வேண்டும். பேரிகார்டுகளை எடுத்து செல்லாமல் அதே இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா; டன் கணக்கில் குவிந்த பூக்கள்!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Muthumariamman temple flower sprinkling festival Tons of flowers

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று (14.07.2024) பூச்சொரிதல் விழா நடந்தது. கிராமத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள், கிராமத்தினர் மேளதாளங்கள் முழங்க பூ தட்டுகளுடன் ஊர்வலமாகக் கோயிலுக்குக் கொண்டு வந்து அம்மனுக்கு மலரபிஷேகம் செய்தனர்.

அதே போலச் செண்டை மேளம், டிரம்ஸ் வானவேடிக்கைகளுடன் வாகன உரிமையாளர்கள் வாகனங்களிலும் பூ தட்டுகள் கொண்டு வந்தனர். டன் கணக்கில் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு மலர் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து இரவு கரகாட்டம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை நாலாஞ்சந்தி கருப்பர் உள்படக் கிராமத்தில் உள்ள கோயில்களில் பொங்கல் வைத்துச் சிறப்பு வழிபாடுகள் செய்து வரும் 21ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி 10 நாட்கள் வரை நடக்கிறது. 

Muthumariamman temple flower sprinkling festival Tons of flowers

அதன்படி வரும் 28 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பொங்கல் திருவிழாவும் 29 ஆம் தேதி திங்கள்கிழமை தேரோட்டத் திருவிழாவும் நடக்கிறது. திருவிழா நாட்களில் பகலில் அன்னதானமும் இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்து வருகின்றனர்.