Advertisment

ஆண், பெண் செவிலியர் உதவியாளர்கள் பயிற்சி முடித்த நூற்றுக்கணக்கானோர் அரசு வேலைவாய்ப்புகள் வேண்டி டி.எம்.எஸ் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதனைக் கேள்வியுற்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். அதன் பின்பு இதுகுறித்து துறை ரீதியான அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.