
பழங்குடியினருக்கு மக்களுக்கு வீட்டுமனை வழங்க தனது 20 சென்ட் இடத்தை அமைச்சர் மஸ்தான் தானமாக வழங்கியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கொத்தமங்கலம் சாலையில் வாழ்ந்து வரும் பழங்குடி இருளர் இன மக்கள் வீட்டுமனை பட்டா வேண்டுமென கோரிக்கை வைத்து தமிழக முதல்வர் மு.க,ஸ்டாலினிடம் மனு கொடுத்திருந்தனர். இந்த பழங்குடியின மக்களுக்கு நகர எல்லையில் இடமில்லை என்பதால் அமைச்சர் மஸ்தான் கடந்த 30-ஆம் தேதி தனக்கு சொந்தமான 66 சென்ட் இடத்தை அவருடைய மனைவி, மகள் உடன் வந்து அரசுக்கு தானமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்திருந்தார். இந்நிலையில் அந்த இடத்தில் பட்டா வழங்க அதிகாரிகள் அளவீடு செய்தபோது ஐந்து பேருக்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து அந்த நிலத்திற்கு அருகிலேயே இருந்த மேலும் 20 சென்ட் இடத்தை நேற்று அமைச்சர் அரசுக்கு தானமாக பத்திரப்பதிவு செய்து வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)