ADVERTISEMENT

"அண்ணாமலை போன்று வெறுப்பு பிரச்சாரம் செய்பவருக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இருக்கு..." - அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

11:36 PM Nov 30, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் வருகையின் போது பிரதமருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஆளுநரைச் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "செஸ் ஒலிம்பியாட்டிற்கு பிரதமர் வந்த பொழுது அவரின் பாதுகாப்பிற்குப் பயன்படும் உபகரணமான மெட்டல் டிடெக்டர் வேலை செய்யவில்லை. பழுதடைந்து இருந்தது" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, "பிரதமரின் வருகையின் போது குளறுபடி நடந்ததாக எந்தத் தகவலும் இல்லை. எல்லாம் நல்ல முறையில் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் காவலர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் சரிபார்க்கப்பட்டு, சரிசெய்யப்படும் பழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. தமிழ்நாட்டில் தான் அதிகமான எண்ணிக்கையில் உபகரணங்கள் உள்ளது" எனக் கூறினார்.

இந்நிலையில் அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டு குறித்துப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், " பாஜக ஆளும் மாநிலங்களில் சாதாரண மக்களுக்கே பாதுகாப்பு இல்லை. அண்ணாமலை போன்று வெறுப்புப் பிரச்சாரம் செய்பவர்களுக்குக் கூட தமிழ்நாட்டில் பாதுகாப்பு உள்ளது. பிரதமருக்குப் பாதுகாப்பு அளிக்க இந்த அரசுக்குத் தெரியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT