தமிழகத்தினைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மட்டுமே பெரிய கட்சிகள் அ.ம.மு.க. கட்சி இருப்பதாகத் தெரியவில்லை அமைச்சர் மணிகண்டன் தெரிவிக்க, அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர் அ.ம.மு.க.வினர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ராமநாதபுர சட்டமன்றத் தொகுதி நிதியிலிருந்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் பாம்பன் ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள மூன்று அரசுப் பள்ளிகளுக்கு சுமார் 15 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிதண்ணீர் நிலையங்களை மாணவ மாணவியரின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் மாணவ மாணவிகளிடம் உரையாற்றினார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, "கடந்த மாதம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தற்போது சிறையில் உள்ள தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை மீட்பதற்கு மத்திய அரசுக்கு தெரிவித்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் விரைவில் மீனவர்கள் மீட்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து அ.ம.மு.க நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து பதில் அளித்த அமைச்சர், "தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மட்டுமே பெரிய கட்சிகள் எனவும் தமிழகத்தில் அ.ம.மு.க. இருப்பதாக தெரியவில்லை. தேர்தல் முடிந்த பின்பு அனைத்து கட்சிகளும் காணாமல் போய்விடும்." எனவும் தெரிவித்ததால் அமைச்சருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் எதிர்க்கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் அ.ம.மு.க.தொண்டர்கள். இதனால் அரசியல் வட்டாரம் பரப்பரப்படைந்துள்ளது.