Minister Mahesh conducts surprise inspection Teachers in shock!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மலைக்கோயில் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் உள்ள வசதிகள் குறித்தும், தேவைப்படும் மேம்பாட்டு வசதிகள் குறித்தும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். மேலும் வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களை சந்தித்து அவர்களிடம் பேசினார்.

Advertisment

Minister Mahesh conducts surprise inspection Teachers in shock!

தற்போது 12 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அப்பள்ளியில் நடைபெற்றுவந்த தடுப்பூசி முகாமினை பார்வையிட்டார். மேலும் மாணவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி குறித்தும், அதன் ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். எந்தவொரு முன்னறிவிப்புமின்றி திடீரென மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டது பள்ளி ஆசிரியர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment