
சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நலத்திட்ட உதவிகளை, தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியதோடு, புயலால் சேதமடைந்த பகுதிகளையும், வெள்ளத்தால் இடிந்த வீடுகளையும் ஆய்வுசெய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
வெள்ளப் பாதிப்பு தொடர்பாக பேசிய அவர், "தமிழக அரசு வெள்ளப்பாதிப்பு தொடர்பாக, சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை, இதைப் பற்றி நாம் கேள்வி எழுப்பினால், என்னை 'அறிக்கை' நாயகன்என்று கூறுகிறார். நான், அறிக்கை நாயகன் என்றால், எடப்பாடி பழனிசாமி 'ஊழல்' நாயகன்" என்றார். இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் "முதல்வருக்கு ஊழல் நாயகன் எனப் பதிலுக்குப் பதில் மு.க.ஸ்டாலின் பட்டம் கொடுப்பது, சிறுப்பிள்ளை தனமான செயல்" என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)